பம்பையில் நீராடும் போது இதை பண்ணுனா அவ்வளவு தான்!...தேவஸ்தான அமைச்சர் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


 கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை விழாவிற்காக, கோவில் நடை கார்த்திகை மாதம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பின்னர் மண்டல பூஜை முடிந்த உடன், கோவில் நடை அடைக்கப்பட்டு தை மாதமான மகரஜோதியின் போது கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இந்த காலகட்டங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி, நடப்பு ஆண்டில் வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும் நிலையில், அன்று இரவு நடை சாத்தப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், மகர விளக்கு பூஜை தொடங்குவதற்கு முன்னதாக, அய்யப்ப பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்படும் என்றும், குறைந்தது 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகளை தயாரிக்கப்படும் என்று, கேரள தேவஸ்தான துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பம்பையில் நீராடும் பக்தர்கள் தங்களது உடைமைகளை ஆற்றில் போட்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you do this while bathing in the pump that is all! devasthanam minister takes action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->