திருச்செந்தூரில் யாக சாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழா.! - Seithipunal
Seithipunal


தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது.

இந்த விழாவின் போது யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளுதல், வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு உள்ளிட்ட பாடல்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க சண்முகவிலாசம் சேர்தல், சுவாமிக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

இந்தக் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kantha sasti funtion start thiruchenthur temple from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->