குலதெய்வ அருள் கிடைக்க வேண்டுமா? இதை வீட்டில் வைத்து வணங்குங்கள்.!
Karungali Mara Porutkal for Kuladeiva vazhipadu
கருங்காலி.. மரங்களின் வரம்:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்தை வாழவிப்பதற்காக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை காடுகளிலும், மலைகளிலும் கண்டுபிடித்து அவற்றை கோயில்களில் நட்டுவைத்து இறைவனோடு சேர்த்து வணங்கினார்கள் நம் முன்னோர்கள். அந்த தல விருட்சங்களுக்கு அடியில் விழுந்து வணங்கும்போது அந்த மரத்தின் மருத்துவ குணம் நம் மீது படர்வதால் நோய்கள் விடுபடும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்கள்.
குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் எந்தவொரு பலனும் கிடைக்காது. குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருளை பெற்றிடவும், குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி பொருட்கள்.
கருங்காலி மரத்தை மக்கள் செவ்வாய் கிரகத்தின் அம்சமாக வணங்கி வருகிறார்கள். செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் தீய விளைவுகள், தோஷங்களில் இருந்து நம்மை காக்கிறது. அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தல விருட்சங்களில் கருங்காலி மரம் அதீத மருத்துவ குணம் நிறைந்ததாக காணப்படுகிறது. இம்மரத்தின் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது.
கருங்காலி பொருட்களை பயன்படுத்தி வந்தால்,
உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
கோபங்களை சிறிது சிறிதாக குறைக்கும்.
மன பயத்தை நீக்கி தைரியத்தை அளிக்கும்.
தேவையற்ற பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
செவ்வாய் தோஷ பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கக்கூடியது.
கண் திருஷ்டி மற்றும் காரியத்தடை நீங்கும்.
குலதெய்வ அருள் கிடைக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
English Summary
Karungali Mara Porutkal for Kuladeiva vazhipadu