விருட்ச சாஸ்திரம் : கொடுக்காய்ப்புளி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா! - Seithipunal
Seithipunal


கொடுக்காய்ப்புளி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

கொடுக்காய்ப்புளி என்றவுடன் பள்ளிப்பருவத்தில் விடுமுறை நாட்களில் கொடிக்காய் மரத்தில் ஏறி கொடிக்காயைப் பறித்து உண்டதே நம் நினைவிற்கு வரும்.

கொடுக்காய்ப்புளி மரம், கோணபுளியங்கா மரம், சீனிப் புளியங்கா மரம், கொறுக்கா புளி மரம் என்று பல பெயர்களில் அழைப்பர். இந்தியில் இதை ஜங்கிள் ஜிலேபி என்று அழைப்பர்.

கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் இதற்கு பெயர் உண்டு.

கொடிக்காய் மரமானது 30-100 செமீ விட்டமுடைய சாம்பல் வடிவ தண்டினைக் கொண்டது. மேலும் இவை 5-20 மீ உயரம் வரை வளரும் இயல்புடையது.

கொடிக்காய் மரமானது எல்லாவகை மண்ணிலும் செழித்து வளரும் இயல்பினைக் கொண்டது. இந்த மரத்தின் பூக்கள் சிறிதாக கோள வடிவில் வெள்ளை-பச்சை கலந்த நிறத்தில் காணப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளியின் சதைப்பகுதி, இலை, பட்டை, பூ ஆகியவை மருந்துப் பொருளாக உயோகிக்கப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும், தாது உப்புகளான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவையும் காணப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளி காயில் உள்ள வைட்டமின் பி1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து நன்கு வளரச் செய்கிறது.

கொடுக்காய்ப்புளி மரத்தின் பூவானது பல் வலி, ஈறுகளின் பிரச்சனைக்கும் இது தீர்வளிக்கிறது.

கொடுக்காய்ப்புளி பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை பாதுகாத்து அவற்றை வலுவாக்குகிறது.

இதன் இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சோப்பு தயாரிப்பிலும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கொடுக்காய்ப்புளியின் பட்டையிலிருந்து மஞ்சள் நிறச்சாயம் தயார் செய்யப்படுகிறது.

கொடுக்காய்ப்புளி தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.

எங்கு வளர்க்கலாம்?

கொடுக்காய்ப்புளி மரத்தை வீடுகளில் வளர்க்கலாம். மேலும் வீட்டின் வேலி பகுதிகளில் கொடுக்காய்ப்புளி மரத்தை வளர்க்கலாம். 

வயல்களில் உள்ள பாசன வாய்க்கால் ஓரங்களில் கொடுக்காய்ப்புளி மரத்தை வளர்க்கலாம்.

இந்த மரங்கள் குட்டையாகவும், முட்களுடனும் இருப்பதால் வேலிக்காகவும் கிராமங்களில் நடுவார்கள். 

எந்த திசையில் வளர்க்கலாம்? 

கொடுக்காய்ப்புளி மரத்தை வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வளர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kodukkapuli Tree Virutcha sarthiram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->