உத்தரப்பிரதேசம்: ஃபதேபூரில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்கள்!
UttarPradesh Train Accident
உத்தரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் மாவட்டம், காகா பகுதியில் உள்ள பாம்பிபூர் அருகே இன்று காலை இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கார்டு கம்பார்ட்மெண்ட் மற்றும் என்ஜின் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட தகவலின்படி, சிக்னல் கோளாறு காரணமாக முதல் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் நிற்கும் போது, அதன் பின்னால் வந்த இரண்டாவது சரக்கு ரெயில் நேரிடையாக மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தால் அப்லைன் பாதையில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விபத்து காரணமாக பல ரெயில்கள் இடையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரெயில்களின் மோட்டார்மேன்கள் காயமடைந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெயில்வே நிர்வாகம் தடம் புரண்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணங்களைத் தெரிந்துகொள்வதற்காக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு விபத்துக்கான உண்மையான காரணம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
UttarPradesh Train Accident