மொத்தம் ரூ.1,000 கோடி சொத்து, ரூ.912 கோடி வைப்புத்தொகை! சென்னையில் தொழிலதிபருக்கு ஆப்பு வைத்த அமலாக்கத்துறை!
Chennai Business man Andal Aarumugam ED Case report
சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் சொத்துக்கள் தொடர்பான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், ஆண்டாள் ஆறுமுகத்திற்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலில், சில நாட்களுக்கு முன்பு ஆண்டாள் ஆறுமுகத்துடன் தொடர்புடைய மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது, ரூ.1,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், நிலங்கள் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட நிதிச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான இந்த விசாரணை தொடரும் நிலையில், ஆண்டாள் ஆறுமுகத்தின் நிதி செயல் முறைகள் குறித்து மேலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
Chennai Business man Andal Aarumugam ED Case report