பணவிரயத்தை குறைத்து.. பணவரவை அதிகரிக்க செய்யும் கோமதி சக்ர மரம்.! - Seithipunal
Seithipunal


லட்சுமிதேவிக்கு பிரியமான கோமதி சக்கரம்:

திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக கோமதி சக்கரம் நம்பப்படுகிறது. கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் அம்சம் உள்ளது. இதை வைத்திருப்பவர்களிடம் குபேர வாசம் உண்டாகும்.

கோமதி சக்ர மரம் உருவான வரலாறு :

கிருஷ்ணர் அவதாரத்தில் விஷ்ணு துவாரகையில் இருந்தபோது கோமதி நதிக்கரையில் ஒரு மரத்தை நட்டு வைத்தார். இம்மரம் கோமதி சக்கர வடிவத்தில் இருக்கும் கனிகளை வழங்கியது. கிருஷ்ணர் நட்டு வைத்த மரம் என்பதால் இம்மரத்தின் கனியை ராதையும் விரும்பி உண்டார்.

இந்த கோமதி சக்ர மரத்தை நம் ஒவ்வொரு வீட்டிலும் வைத்து, முக்கியமான நாட்களில் வழிபடுவது லட்சுமிதேவியின் அருளை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.

பூஜை செய்யும் முறை :

இந்த கோமதி சக்ர மரத்தை பூஜையறையில் வைத்து தினந்தோறும் குளித்துவிட்டு சந்தனம், குங்குமம் மற்றும் மஞ்சள் வைத்து வழிபட்டு வரும்போது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதுகாக்கும்.

வீட்டில் கோமதி சக்ர மரத்தை வைத்து வழிபடுவதால் ஏற்படும் பயன்கள் :

இந்த கோமதி சக்ர மரத்தை வீட்டில் வைத்து வணங்குவதன் மூலம் அடிக்கடி கண் திருஷ்டியால் அவதிப்படுபவர்களின் இன்னல்கள் படிப்படியாக குறையும்.

தொடர்ந்து பணவிரயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோமதி சக்ர மரத்தை வணங்குவதன் மூலம் பணவிரயம் ஏற்படுவது குறையும் என்பது நம்பிக்கை.

மேலும், வியாபாரத்தில் எதிர்மறை ஆற்றல்களாலும், எதிரிகளாலும் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வளையமாகவும் செயல்படும்.

குழந்தைகளின் பேச்சாற்றலை வளர்க்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த கோமதி சக்ர மரம்.

கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் பெரும்பாலும் குடும்பத்தின் அமைதியையும், மகிழ்ச்சியையும் கெடுப்பதாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

komathi chakra tree for saving money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->