குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதன் காரணம் என்னவாக இருக்கும்?!
kuzhandhaikalukku mottai adikka reason
மொட்டை அடித்தல்:
பொதுவாக இந்து மக்கள் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான்.
மொட்டை அடிப்பது என்பது மிகவும் முக்கியமான சடங்காகும். இது பணிவை எடுத்துக்காட்டும் செயல். உங்களை ஒட்டு மொத்தமாக கடவுளுக்கு அற்பணிக்கும் ஒரு முயற்சி.
மொட்டை அடித்தல் உருவான கதை :
மகாபாரதத்தின் இறுதி நாளான 18ஆம் நாள் பாண்டவர்களின் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குரு துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் அந்த பிஞ்சு குழந்தைகளை தூங்கும் போதே கொடூரமாக கழுத்தறுத்து கொன்றான்.
அடுத்தநாள் வந்து பார்த்த பாண்டவர்கள் மனம் நொந்து அழுதனர். அப்போது அர்ஜுனன், பிஞ்சு குழந்தைகளை கொன்ற அந்த மிருகத்தை விடமாட்டேன், அவனை கொன்று குவிப்பேன் என்று சபதம் இட்டு அஸ்வத்தாமனை அன்று மாலையே விலங்கிட்டு பாண்டவர்கள் முன்பு நிறுத்தினான். அப்போது திரௌபதியும், பாண்டவர்களும் நம் குரு துரோணாச்சாரியாரின் மகனை கொல்வது பாவம் என்று நினைத்தனர்.
ஆனால் அர்ஜுனன் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அப்போது அங்கு தோன்றிய கிருஷ்ண பகவான், அர்ஜுனரே, உன் கோபம் சரிதான். ஆனால் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ இதை புரிந்துகொள்ள வேண்டும். அவன் தலையை வெட்டி அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, அவனுக்கு மொட்டை அடித்து அனுப்பி விடு. இது அவன் மரணத்திற்கு சமம் என்று கூறினார். அர்ஜுனரும் அவ்வாறே அவனுக்கு மொட்டை அடித்து அனுப்பினார். மொட்டை அடிப்பது என்பது மரணத்திற்கு சமம் என்பது இந்த கதையில் இருந்து நமக்கு தெளிவாகிறது.
எப்போது மொட்டை அடிக்க வேண்டும்?
குழந்தைகளுக்கு எப்போதும் ஒற்றைப் படை வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டும். ஒன்று, மூன்று, ஐந்து போன்ற வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதற்கு தெரியுமா?
குழந்தைகளுக்கு மொட்டை போடுவதில் அறிவியலும் உள்ளது. குழந்தைகள் பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த தாய் சாப்பிட்ட அனைத்து பொருட்களும் அந்த குழந்தையின் தலையில் தான் ஒட்டி இருக்கும். நாம் குழந்தைக்கு ஐந்து வயதிற்குள் நிறைய முறை மொட்டை அடிப்பதால் குழந்தை தலையில் உள்ள அனைத்து கசடுகளும் வெளியே வந்துவிடும். குழந்தைகளுக்கு முடியும் வேகமாக வளர ஆரம்பிக்கும்.
நன்மை :
குழந்தைக்கு மொட்டை போடுவதினால் இரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவை தூண்டப்படுகிறது.
குழந்தையின் பல் வளர ஆரம்பிக்கும்போது குழந்தையின் உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். அந்த தருணங்களில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
English Summary
kuzhandhaikalukku mottai adikka reason