லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்...திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்..! - Seithipunal
Seithipunal


தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் அங்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

கார்த்திகை தீபம் என்றாலே உலகில் உள்ள சிவபக்தர்களின் நினைவில் தோன்றுவது திருவண்ணாமலை. கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் ஏற்றப்படும் தீபத்தை பரணி தீபம் என்று கூறுவார்கள்.

அப்படி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர விழாவான மகா தீப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை தரிசனம் செய்வதற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிளது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  பல்வேறு துறைகள் சார்பில் பல முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகரம் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakhs of devotees throng Tiruvannamalai Karthigai Deepam Festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->