கவலைகளை தீர்க்கும், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை... என்ன செய்ய வேண்டும்?!
last purattasi of 2022
புரட்டாசி கடைசி சனிக்கிழமை:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையை தரும்.
அந்த வகையில் நாளை (15.10.2022) புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆகும்.
என்ன செய்யலாம்..
விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து வீட்டிலிருக்கும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படத்தின் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும்.
அன்று பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம்.
மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அன்று முழுவதும் விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை படிக்கலாம்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று வறியவர்கள், எளியவர்கள் முதலியவர்களுக்கு தானம் செய்யலாம். அதாவது புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வணங்கி தானம் செய்யலாம்.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்கலாம்.
பலன்கள் :
கடைசி சனிக்கிழமையான நாளை விரதமிருந்து பெருமாளை மனமுருகி வணங்கினால் அதன் பலன்கள் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.