உங்கள் வீட்டில் இந்த இடத்தில் பல்லி கத்துகிறதா... அப்போ இதுதான் அதன் பலன்..!
lizard sound is bad or good
பல்லி உடலில் விழும் இடத்தை வைத்து பலன்கள் சொல்லப்படுகிறது. அதேபோல வீட்டில் பல்லி சத்தம் எழுப்பகூடிய திசையை வைத்து சில பலன்கள் இருக்கின்றன. அவை என்னவென தெரிந்து கொள்வோம்.
தென்மேற்கு திசை:
இந்த திசையில் பல்லி கத்தினால் வீட்டிற்கு உறவினர் வருகை உண்டாகும். அவர்கள் மூலம் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.
தென்கிழக்கு திசை:
வீட்டின் அக்னி மூலையில் பள்ளி கத்தினால் வீட்டில் ஏதேனும் கலகம் வர வாய்ப்புண்டு. தொடர்ந்து கத்தினால் அந்த வீட்டில் கெட்ட செய்தி வரலாம்.

கிழக்கு திசை:
கிழக்கு திசையில் இருந்து பல்லி கத்துவது ராகு கிரகத்தின் தன்மையை குறைக்கும். இதனால், மனதில் பயம், கெட்ட செய்திகள் வரக்கூடும்.
வடக்கு திசை:
வாயு மூலையில் இருந்து பல்லி சத்தமிடுவது வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
English Summary
lizard sound is bad or good