மகா கும்பமேளா..ரூ.2 லட்சம் கோடி வருவாய் இலக்கு..யோகி ஆதித்யநாத் நம்பிக்கை!
Maha Kumbh Mela Revenue target of Rs 2 lakh crore Yogi Adityanath confident
உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என உத்தர பிரதே முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா கும்பமேளாவருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது.இந்த கும்பமேளாவை முன்னிட்டு தெய்வீக உத்தர பிரதேசம் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரை என்ற தலைப்பில் பிரபல ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறும்போது, இந்த கும்பமேளாவானது, இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் என்று கூறினார் .
மேலும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால், இந்தியாவின் ஆன்மீக வேர்கள் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன என கூறிய அவர், நாடு பெருமையுடனான பாரம்பரியத்தினை தழுவுவதற்காக உத்வேகம் ஏற்படுத்திய பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டி பேசினார் யோகி ஆதித்யநாத்.
தொடர்ந்து பேசிய அவர் 2024-ம் ஆண்டு, 16 கோடி பக்தர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தனர்என்றும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அயோத்திக்கு 13.55 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் வந்தனர் என அப்போது கூறிய யோகி ஆதித்யநாத்.
கடந்த 2019-ம் ஆண்டில் மகா கும்பமேளாவால் ரூ.1.2 லட்சம் கோடி வருவாய் மாநிலத்திற்கு கிடைத்ததுஎன்றும் இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறிய அவர் இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று நம்பிக்கையாக ஆதித்யநாத் கூறியுள்ளார்.
English Summary
Maha Kumbh Mela Revenue target of Rs 2 lakh crore Yogi Adityanath confident