மகாளய பட்சம் : இந்த பொருளை தானம் செய்து... முன்னோர்களின் ஆசியை பெறுங்கள்.! - Seithipunal
Seithipunal


மகாளய பட்சமான இந்த 15 நாட்களிலும் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்கள் சந்ததியினருடன் தங்கி, உணவு அருந்துகின்றனர் என நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் முன்னோர்களின் ஆத்ம திருப்திக்காக இந்த நாட்களில் சிரார்த்தம், தர்ப்பணம் மற்றும் தானம் செய்தல் போன்றவை அவசியமாகும்.

நாம் 'மறந்தவனுக்கு மகாளயத்தில் கொடு" என்ற பேச்சுவழக்கினை கேட்டிருப்போம். இந்த வாக்கியத்தை பலரும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது தனது தாய் அல்லது தந்தைக்கு பிரதி வருடந்தோறும் வருகின்ற சிரார்த்தத்தை செய்யாமல் மறந்து போனவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.

முன்னோர்களின் ஆசியை பெற்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். முன்னோர்களின் ஆசி வாழ்க்கையில் வெற்றியையும், செல்வத்தையும் தேடி தரும்.

மகாளய பட்ச காலத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும்?

அன்னதானம் - மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியை போக்குவதோடு, பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கும் உணவு கொடுப்பதனால், நம்முடைய பல தலைமுறையினருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக சந்ததிகளின் வாழ்க்கையில் இருக்கும் தடை மற்றும் துன்பங்கள் என அனைத்தும் நீங்கும்.

தானம் கொடுக்கும் போது இந்த திசையில் நின்று கொடுங்கள்.! உங்களுக்கு  அதிர்ஷ்டம் கிடைக்கும்.! - Seithipunal

ஆடை தானம் - மகாளய பட்சத்தில் ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுப்பதோடு, ஆடைகளையும் தானம் செய்ய வேண்டும். வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.

நெய் தானம் - மகாளய பட்சத்தில் சுத்தமான பசு நெய் தானமாக வழங்குவதன் மூலம் குடும்ப பிரச்சனைகள் நீங்கி முன்னோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும். எனவே, இந்த காலத்தில் நெய் தானம் செய்வது நல்லது.

தங்கம் மற்றும் வெள்ளி தானம் - மகாளய பட்ச காலத்தில் தங்க பொருட்களை தானம் செய்வதன் மூலம் தானம் செய்பவர் சந்தித்து வரும் குரு தோஷம் அல்லது குரு கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அதே நேரத்தில், வெள்ளி சந்திரனை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்நாட்களில் வெள்ளியை தானம் செய்வதால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஒற்றுமை போன்றவை உண்டாகும்.

எள் தானம் - மகாளய பட்ச காலத்தில் கருப்பு எள் தானம் செய்வதன் மூலம் அனைத்து தடைகளிலிருந்தும் விடுதலை பெறுவர். இதுமட்டுமின்றி கிரகங்கள் மற்றும் ராசியினால் ஏற்படும் தடைகள் விலகும். மேலும், நெருக்கடிகள் நீங்கும்.

உப்பு தானம் - மகாளய பட்சத்தின் போது உப்பு தானம் செய்வது எதிர்மறை சக்தியிலிருந்து விடுதலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இந்நாட்களில் உப்பை தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

எனவே மறக்காமல் இந்த மகாளய பட்ச காலத்தில் நம்மால் முடிந்த தானங்களை செய்து வழிபடுவோம்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahalaya patcham donate these things to pavavimochanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->