2022 புத்தாண்டு.. டும்... டும்... டும்... எந்தெந்த ராசிக்கெல்லாம் திருமணம் கைகூடும்.?! - Seithipunal
Seithipunal


திருமண யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார்?

இந்த உலகில் பிறந்த உயிர்களில் முதன்மை உயிரினமாக கருதப்படுவது மானிட உயிரினமாகும். இந்த மானிட உயிரினத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு புதுவிதமான அத்தியாயங்களை ஏற்படுத்துவதற்கான சூழல் உண்டாகும்.

இந்த புதுவிதமான அத்தியாயங்களில் முதன்மை அத்தியாயமாக கருதப்படுவது திருமணம் என்ற ஒரு அழகிய பந்தமாகும்.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நமக்கான துணையையும், நமது வாழ்க்கையின் ஆதரவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு அழகிய பந்தமாகும்.

2022 புத்தாண்டில் திருமண யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார்? என்பதை இப்பகுதியில் பார்க்கலாம்.

அதிர்ஷ்டத்தை கொடுப்பவர் குரு. இவர் பார்வை பட்ட இடம், பார்வை பட்ட கிரகங்கள் நன்மையே செய்யும். மனித உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் ஒழுங்குப்படுத்தி சீராக இயங்க செய்பவர் குரு ஆவார். சுபகிரக வரிசையில் முதலிடம் பெறுபவர். ஜோதிடத்தில் குரு என்றாலும், வியாழன் என்றாலும் ஒன்று தான். ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார்.

ஆண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் (குரு) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால், அதை 'வியாழ நோக்கம்" என்பார்கள்.

பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் (குரு) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தையோ பார்த்தால், அது 'வியாழ நோக்கம்" என்பார்கள்.

குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதமடைந்து நன்மைகள் நடைபெறும் என்பது ஜோதிட சாஸ்திரம்.

குரு பகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார் மற்றும் 7வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.

ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி. அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும்.

எனவேதான், திருமணத்தில் குருபலன் வந்துவிட்டதா? என அறிந்த பின் திருமண முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

பொதுவாக தை மாதம் பிறந்தாலே அனைவரும் ஜோதிடரிடம் சென்று என் ராசிக்கு திருமணம் நடக்குமா? என்று கேட்கிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில், குரு ஜாதகருடைய ராசியிலிருந்து 2, 5, 7, 9, 12 போன்ற இடங்களை தனது பார்வையால் பார்க்கும்போது குருபலன் வருகிறது.

ஒருவருக்கு திருமணம் நடைபெற குருபலன் என்பது மிகவும் இன்றியமையாததாகும். பிறக்கவிருக்கும் புத்தாண்டில் எந்த ராசிக்கு குருபலன் இருக்கிறது? என்று பார்ப்போம்...

2022 ஆம் ஆண்டில் திருமண யோகம் பெறும் ராசிக்காரர்கள்:

மேஷம்

ரிஷபம்

கடகம்

கன்னி 

தனுசு 

கும்பம்

சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப குரு பகவான் அளிப்பார். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage for those zodiacs in 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->