அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா.! வருகின்ற 26ஆம் தேதி தொடக்கம்.!
Navratri festival starts on the 26th of Arunachaleswarar Temple in Tiruvannamalai
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகின்ற 26-ந் தேதி தொடங்க உள்ளது.
இவ்விழாவையொட்டி, திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட உள்ளது. வருகிற 26-ந் தேதியன்று மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதைத்தொடர்ந்து, 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும் 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி ஆண்டாள் அலங்காரமும், 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது.
மேலும் மாலையில் சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
English Summary
Navratri festival starts on the 26th of Arunachaleswarar Temple in Tiruvannamalai