நேரலையில் தோன்ற போகும் நித்தியானந்தா...!!! பரபரப்பில் பக்தர்கள்!!!
Nithyananda appear live Devotees excitement
நித்யானந்தா சுவாமி, 'கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கி அங்கு இருப்பதாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறார்.இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது.

ஆனால் நித்யானந்தா சுவாமி நான் உயிருடன் தான் இருக்கிறேன் என விளக்கி வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நித்யானந்தா, நாளை தமிழ்ப் புத்தாண்டையொட்டி இன்று இரவு 7 மணி அளவில் ஆங்கிலத்திலும், நாளை இரவு 8 மணி அளவில் தமிழிலும் நேரலையில் தோன்றி உரையாடவுள்ளார்.
இதுகுறித்து நித்யானந்தா பக்தர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பதிவில், 'பகவான் ஜி நித்யானந்தா பரமசிவம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவரின் பக்தர்கள் அவரைக் காண ஆவலுடன் இருப்பதாகத் தெரிகிறது.
English Summary
Nithyananda appear live Devotees excitement