கடன் நீங்கி... லட்சுமி கடாட்சம் பெருகி.. பணவரவு அதிகரிக்க.. பஞ்சகவ்ய விளக்கு.! - Seithipunal
Seithipunal


கடன் பிரச்சனைகளை நீக்கும் விளக்கு.!

பஞ்சகவ்ய விளக்கு 

குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக வீட்டில் பல வகையான ஹோமங்களை செய்ய வேண்டும். வீடு கட்டும்போது முதன்முறையாக யாகம் நடத்தியதோடு சரி. அதன்பின்பு யாகம் நடத்துவது சற்று சிரமமாகத்தான் உள்ளது.

மிகப்பெரிய யாகத்தை செய்த பலனை கொடுக்கும் அளவிற்கு ஒரு விளக்கேற்றும் முறை உள்ளது. நீங்கள் இந்த விளக்கை ஏற்றினால் போதும் ஹோமம் செய்ததற்கு ஈடான பலனை பெறலாம். அப்படி மிகப்பெரிய பலனை கொடுக்கக்கூடியதுதான் பஞ்சகவ்ய விளக்கு.

பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளை கொண்டு செய்யப்படுகிறது. இந்த ஐந்து மூலப்பொருட்களும் ஒன்றாக கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது.

விளக்கேற்றும் முறை :

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழையிலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின்பு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.

இந்த விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். இந்த திருநீறை பூசிக் கொள்வதால் நன்மைகள் ஏற்படும்.

எப்போதெல்லாம் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றலாம்?

பஞ்சகவ்ய விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோ பூஜை மற்றும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும், ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.

வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை அடியோடு வெளியேற்றி வீட்டில் சண்டை, சச்சரவுகளை நீக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, லட்சுமி கடாட்சம் நிறைய செய்யும். மேலும், கடன் பிரச்சனைகள் குறைந்து வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panchakavya lamp special


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->