பாஜக எம்.பிக்கள் என்னை தள்ளிவிட்டு மிரட்டினர் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி.!
ragul gandhi speech about bjp mp threat
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, 'அம்பேத்கர் குறித்து பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும், அமைச்சர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி, "நடந்த சம்பவம் ஒருவேளை உங்களது கேமராவில் பதிவாகி இருக்கலாம். நான் பாராளுமன்றதிற்குள் நுழைய முயன்றபோது பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளி விட்டு மிரட்டல் விடுத்தனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே அவர்களை எதிர்த்துத் தள்ளும்போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
ஆனால், இந்த சலசலப்பை கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. பாராளுமன்ற நுழைவாயில் உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அரசியலமைப்புச் சட்டத்தைத் தாக்கி அம்பேத்கரை அவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதே முக்கிய பிரச்சினை" என்று தெரிவித்தார்.
English Summary
ragul gandhi speech about bjp mp threat