தீராத கடன் பிரச்சனை & பணப் பிரச்சனையை போக்கும் பஞ்சகவ்ய விளக்கு..!
panja kavya vilakku for money problems
முந்தைய காலங்களில் எல்லாம் அரசர்கள் தங்களது நாடு வளமாக இருக்க, நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேர்த்து, தங்களுடைய அரண்மனையில் பெரிய பெரிய யாகங்களையும், ஹோமங்களையும், சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து நடத்துவார்கள்.
காலம் மாறிய பின்பு, வீடு கட்டும்போது முதன்முறையாக யாகம் நடத்தியதோடு சரி. அதன்பின்பு யாகம் நடத்துவது சற்று சிரமமாகத்தான் உள்ளது. என்ன செய்வது? வேலைப்பளு ஒரு பக்கமிருக்க இதற்காக ஆகும் செலவை சமாளிக்கும் சக்தி நம்மிடம் இருக்க வேண்டுமல்லவா?
ஆனால், பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் தினமும் ஏற்றுவதால் மிகப்பெரிய யாகத்தை செய்த பலனை கொடுக்கும். கேட்க அதிசயமாக இருந்தாலும் உண்மை.
இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும் போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.
பஞ்சகவ்ய விளக்கிலிருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவ செய்து, வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை வெளியே விரட்ட செய்யும்.
இதனால் வீட்டில் இருக்கும் எல்லா எதிர்மறை ஆற்றல்களும் வெளியேறி பணப்புழக்கம் அதிகரிக்கும்.
எப்போதெல்லாம் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றலாம்?
இந்த விளக்கை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றலாம்.
கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது பல மடங்கு நற்பலன்கள் நமக்கு உண்டாகும்.
பஞ்சகவ்ய விளக்கை நாள்தோறும் வீட்டிலும், வியாபாரம் செய்யும் இடத்திலும் ஏற்றி வழிபட்டு வரலாம்.
பஞ்சகவ்ய விளக்கு எரிந்த பின்பு அணைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்ய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டுவிட வேண்டும். எரிந்த சாம்பலை தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனை தரும்.
English Summary
panja kavya vilakku for money problems