பஞ்சபட்சி சாஸ்திரம்... படுபட்சி... இந்த நாட்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது.!
panja patchi sasthiram
பட்சிகளின் தொழில் வலிமை:
தினந்தோறும் பட்சிகள் மேற்கொள்ளும் தொழில்களில் உள்ள பலம் என்ன? என்பதை பற்றியும், பட்சிகள் எந்த நேரத்தில் என்ன பணிகளை செய்கின்றன? என்பதை பற்றியும் நாம் இதுவரை கண்டு வந்தோம்.
இனி அந்த பலத்தினால் நாம் ஒரு செயலை செய்யும்போது நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன? என்பதை பற்றியும், அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்த பட்சிகளின் தொழிலால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
அரசு, ஊண் :
பட்சியானது அரசு, ஊண் தொழிலை மேற்கொண்டிருக்கும் காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் யாவும் எண்ணிய வெற்றியை அளிக்கும்.
நடை :
பட்சியானது நடை தொழிலை மேற்கொண்டிருக்கும் காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறியாகி பின்பு நிறைவுபெறும்.
துயில், சாவு :
பட்சியானது துயில், சாவு தொழிலை மேற்கொண்டிருக்கும் காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை அளிக்காமல் தோல்வியில் முடியும்.
படுபட்சி நாட்கள் :
பட்சிகள் அனைத்தும் எல்லா நாட்களிலும் வலிமை உடையதாக இருப்பதில்லை. பட்சியானது செயலிழந்து இருக்கும் நாட்கள் படுபட்சி நாட்கள் எனப்படும்.
அந்த நாட்களில் முக்கியமான வேலை, புதிய முயற்சி, சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள், வெளியூர் பயணங்களை மேற்கொள்வது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
மேலும், அவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமல்லாமல் அன்றைய பொழுதுகளான பகல், இரவு என இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.