நல்ல காரியத்துக்கு போகும் போது இதை செஞ்சா.. வெற்றி நிச்சயம்.! மறக்காதீங்க.!
Please Do this For Getting Victory for any work Starting
எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மிகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
நாம் விசேஷமான நாள் அல்லது அன்றாட பூஜைகளை செய்யும் பொழுது நைவேத்தியமாக தேங்காயை வைப்பது சிறப்பு. அந்த தேங்காயை சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த தேங்காயை கொண்டு சமைத்த உணவை மீண்டும் பூஜையில் நைவேத்தியம் வைக்கக்கூடாது.
நைவேத்தியங்களை படைக்கும் பொழுது நேரடியாக உலோகப் பாத்திரங்களில் வைத்து படைக்காமல் இயற்கையாக கிடைக்கும் வாழை இலை அல்லது தெய்வீக இலைகளை வைத்து படைப்பது சிறந்த முறையாகும்.
பொதுவாக கோவில்களில் இறைவனை தரிசித்த பின் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வது நல்லது தான். ஆனால் மகாலட்சுமி வீற்றிருக்கும் விஷ்ணு கோவில்களில் இவ்வாறு அமரக்கூடாது. இந்த கோவிலில் இருந்து நாம் வீட்டிற்கு செல்லும் பொழுது மகாலட்சுமியும் நம்முடன் வருவார்கள். எனவே எங்கும் அமராமல் நேராக வீட்டிற்கு திரும்ப வேண்டும்.
கோவிலுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் வீட்டில் கோலம் போட்டு விட்டு தான் செல்ல வேண்டும். அது போல் வீட்டில் விளக்கேற்றிய பின்னர் தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் இருக்கும் நெய் அல்லது எண்ணெய்யை வெறும் கைகளால் தொடக்கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணெய்யை எந்த காரணம் கொண்டும் நம்முடைய தலையில் தடவிக் கொள்ளக்கூடாது.
வீட்டில் குபேரர் சிலையை அனைவரும் பார்க்கும் வண்ணம் வாசலுக்கு நேரெதிராக அமைத்து வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும். பணம் சேமிக்கும் உண்டியல் குபேரன் பொம்மை போன்று இருப்பது மிகவும் நல்லது.
கதவிற்கு உட்பக்கமாக ஸ்ரீசக்கரம், சுவஸ்திக் அல்லது ஓம், திரிசூலம் போன்ற சின்னங்களை வரைந்து வைப்பதும் அல்லது ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி வைப்பதும் வீட்டின் பாதுகாப்பு அரணாகவும், அதிர்ஷ்டம் பெருகவும் துணையாக இருக்கும்.
நல்ல காரியத்திற்கு வெளியே செல்லும் பொழுது உங்களுடைய பர்ஸ் அல்லது சட்டை பாக்கெட்டில் ஸ்ரீசக்கரம், சுவஸ்திக் அல்லது ஓம், திரிசூலம் போன்ற சின்னங்களை வைத்து சென்றால் சென்ற காரியம் வெற்றி அடையும்.
பூஜை அறையில் பூஜை செய்வதற்கு நிறைய சாமி படங்களை வாங்கி அடுக்கி வைக்கக்கூடாது. இருக்கும் படங்களையும் நெருக்கமாக வைக்கக்கூடாது. ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இடையில் நிச்சயம் இடைவெளி இருக்க வேண்டும். தெய்வப் படங்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை அருகில் இருக்கும் கோவில்களில் கொண்டு போய் வைத்து விடுவது நல்லது. வீட்டில் வைத்திருக்காதீர்கள்.
English Summary
Please Do this For Getting Victory for any work Starting