புரட்டாசி பவுர்ணமி : திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில், கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை உள்ளது. இங்கு மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில்  பவுர்ணமி வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இந்த நிலையில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் பவுர்ணமி வருவதாலும், அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puratasi Pournami Announcement of the best time to go to Krivalam in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->