இராமலிங்க பிரதிஷ்டை - ராமேஸ்வரம் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


ராமேசுவரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முதல் நாள் அன்று ராவண சம்ஹார நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் விபீஷணர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கோவிலின் விஸ்வநாதர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு ஸ்நான கலச பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கலசத்தை கோவில் குருக்கள் சுமந்தபடி மேள, தாளம் முழங்க சாமி பிரகாரத்தை சுற்றி வந்து, கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து கோவிலின் விஸ்வநாதர் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள் சந்தோஷ், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து சுவாமி விக்ரகத்தை தோளில் சுமந்து பிரகாரத்தை சுற்றி ஆடியபடி வலம் வந்து கருவறை உள்ளே சென்று சுவாமி விக்ரகத்தை வைத்தபின்பு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடந்தன.

இந்த ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு கோவிலின் கருவறை மண்டபம் மற்றும் எதிரே உள்ள சாமி சன்னதி பிரகாரமும் பல்வேறு இடங்களில் மலர் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல். தொடர் விடுமுறை காரணமாக நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramanatha swami ramalinga prathistai in rameshwaram


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->