வில்லியனூர் லூர்து மாதா ஆலய குளம்பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடக்கம்! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் லூர்து மாதா ஆலய குளம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.இதனை  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் ஆய்வு செய்தார்.

 புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை ஆலயம் 142 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழர் பண்பாட்டின் படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த குளத்தில் புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் கண் நோய். தோல் வியாதிகள் மற்றும் பல விதமான நோய்களில் இருந்து குணமாகி வருவதாக ஐதீகம். மேலும், வில்லியனூர் மாதா குளத்தை தொடர்ச்சியாக 9 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகவும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த மசபியேல் என்ற குகையின் அற்புத சுனையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித நீர் கொண்டு வரப்பட்டு வில்லியனூர் மாதா குளத்தில் கலக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதா குளம் கடந்த பெஞ்சால் புயல் மழையின் போது, மிகுந்த சேதமடைந்து இடிந்து விழுந்தது. இந்நிலையில் குளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருமாறு மாதா கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து மாதா குளம் புதிதாக கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் மாதா குளத்தை புதிதாக கட்டுவதற்கான திட்ட வரைபடம் தயார் செய்யப்பட்டு, இன்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர், மாதா கோவில் பங்கு தந்தை ஆல்பர்ட் மற்றும் நிர்வாகிகளுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் குளத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது குளத்தை பழமை மாறாமல், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  கட்டுமான பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் லூர்து மாதா ஆலய பங்கு தந்தை ஆல்பர்ட், ஊர் முக்கியஸ்தர்கள் விஸ்வநாதன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல், சந்தானகிருஷ்ணன், கார்த்தி, சண்முகம், ஜேக்கப், பிரதாப், கணேஷ், டோமினிக், லூகாஸ், ரகு, பாஸ்கர், சங்கர், மகேஷ் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அக்பர், கிளை நிர்வாகிகள்  ராஜி, ஜெனா, மில்ட்டரி முருகன், வேதாச்சலம், கசேர், முருகேசன், திலகர், சிராஜ், தாமோதரன், ராதாகிருஷ்ணன், செல்வநாயகம், அன்பு நிதி, சுல்தான், பாலமுருகன், சார்புதின், கோவிந்தராஜ், முருகையன், பாலகுரு, ராஜேந்திரன், கமல் பாஷா, ரகு, அபிமன்னன், பாதின், வீரமுத்து, செல்வம், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Renovation of Lourdes Church in Villianur begins


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->