பொறுமை, பக்குவம் மற்றும் அமைதியை தரும் ருத்ராட்சம்
Rudhratcham special
ருத்ராட்சம் என்பது இந்த பூலோகத்தில் சிவபெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக்கூடிய ஒரு மூலிகை மரமாகும். சித்தர்கள் சிவனின் அனுகிரகத்தை பெற அவர்கள் தியானம் செய்யும்போது கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தியானம் செய்வார்கள்.
ருத்ராட்ச வழிபாடு :
ருத்ராட்சத்தை அபிஷேகம் செய்வதற்கு முன் பன்னீரில் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிருந்து நல்ல சக்திகள் கிடைக்கும்.
பூஜை செய்யும் முறை :
ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலையின் மேல் ருத்ராட்சத்தை வைத்து பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
5 முக ருத்ராட்சம் மற்றும் சிவபெருமான் :
பகவான் சிவபெருமான் திருமுகம் ஐந்து, நமசிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள், சிவபெருமான் புரியும் கரும காரியங்களான (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) ஐந்து. நமது கை மற்றும் கால்களில் உள்ள விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. இப்படி ஐந்திற்கும், இவ்வுலகிற்கும் அதிகமான சம்பந்தம் உண்டு. ஆகவே, 5 முக ருத்ராட்சத்தை அனைவரும் அணியலாம்.
5 முக ருத்ராட்சம் எப்படி அணிய வேண்டும்?
ஒரு குருவிடம் சென்று ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் அல்லது நாமே 'சிவாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்து ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.
5 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பயன்கள் :
உடலுக்கும், மனதிற்கும் அதிகமாக சக்தி தரும் வல்லமை கொண்டது ருத்ராட்சம்.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் புத்திக்கூர்மையையும் பொறுமை, பக்குவம் மற்றும் அமைதியான மனநிலையை பெற்றுத்தரும்.
குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். திறமை பளிச்சிடும்.
மேலும், ருத்ராட்சம் அணிந்து நாம் தினமும் குளிக்கும்போது, ருத்ராட்சத்தின் மீது பட்டு நம் உடலின் மீது படும் நீர், கங்கை நீரில் குளித்த பலனை நமக்கு தருவதாக நம்பப்படுகிறது.