சபரிமலை ஐயப்பன்..!!! நாளை விசுக்கனி தரிசனம் காண கோவிலில் குவிந்த பக்தர்கள்...! - Seithipunal
Seithipunal


கடந்த 1-ந்தேதி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. பின்னர் மறுநாள் அதாவது 2-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இதில் 10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் தற்போது சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை அதாவது 14-ந்தேதி நடைபெறவுள்ளது.

இந்தச் சிறப்பு தரிசனம் முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.இதில் நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர்.

மேலும்  காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம் என கோவில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் சபரிமலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.

இதனால் வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அத்துடன், அன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarimala Ayyappa Devotees thronged temple Vishukani darshan tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->