ஆன்மீக ரகசியங்கள்... சாளக்கிராம வழிபாடு முறைகள் மற்றும் பலன்கள்!
Salakiramam prayer benefits in tamil
சாளக்கிராமம் என்பது கண்ணன் நிறத்தில் உள்ள கல். இது தெய்வீகம் நிறைந்த கல். இது சங்கு, நத்தை ஓடு போன்ற பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் மட்டுமல்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக ஐதீகம்.
மரண காலத்தில் சாளக்கிராமத்தை வணங்குபவர்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். சாளக்கிராம கல்லை வீட்டில் வைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
* சாளக்கிராம பூஜை செய்வது மிகவும் எளிது. தினமும் காலையில் குளித்துவிட்டு தூய ஆடை அணிந்து சாளக்கிராமத்தை பூஜை அறையில் வைத்து பால், தண்ணீர், துளசி தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து சாம்பிராணி, பூ வைத்து வழிபட வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/siya-87p69.jpg)
* விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு இனிப்பை நிறைவேத்தியமாக படைக்கலாம். துளசி இலை வைத்து வழிபடுவது சிறப்பு. சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் தங்களது வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் சாளக்கிராமம் இருக்கும் வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* சாளக்கிராமம் இருக்கும் வீட்டில் சகல சௌகரியமும் இருக்கும் என்பது ஐதீகம். சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால் யாகம், தானம் செய்ததற்காக பலன் கிடைக்கும். சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
* மகிழ்ச்சி, செல்வம் அதிகரிக்கும். சாளக்கிராமம் வைத்து வீட்டில் வழிபட்டால் வாஸ்து சாஸ்திரம், வாஸ்து குறைபாடு, தடைகள் அனைத்தும் விலகும். சாளக்கிராமத்திற்கு தினமும் தண்ணீரால் அபிஷேகம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சாளக்கிராம பூஜை செய்பவர் உள்ளம் தூய்மையாகும். மகாலட்சுமி கடாட்சம் வீட்டிற்குள் குடியேறும்.
English Summary
Salakiramam prayer benefits in tamil