ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்? பூஜை செய்ய உகந்த நேரம் !!
saraswathi poojai and ayudha poojai time to pray
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.
உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை தரவல்ல சக்தியாக மகாலட்சுமியையும், அறிவையும், ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி ஆகும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை.
நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை வழிபட உகந்த நேரங்களை தெரிந்து கொள்வோம்.
பூஜை செய்ய உகந்த நேரம் :
காலை :
ருத்ர முகூர்த்தம்
06.10 am - 07.10 am வரை
பிற்பகல் :
விதி முகூர்த்தம்
12.10 pm - 12.26 pm வரை
சுதாமுகீ முகூர்த்தம்
12.27 pm - 01.14 pm வரை
புருஹூத முகூர்த்தம்
01.15 pm - 02.10 pm வரை
மாலை :
கிரீச முகூர்த்தம்
06.03 pm - 06.50 pm வரை
அஜபாத முகூர்த்தம்
06.51 pm - 07.38 pm வரை
இரவு :
அஹிர்புத்ன்ய முகூர்த்தம்
07.39 pm முதல் 08.26 pm வரை
புஷ்ய முகூர்த்தம்
08.27 pm - 09.00 pm வரை
விஜயதசமி நல்ல நேரம் :
காலை :
வராஹ முகூர்த்தம்
10.40 am - 10.50 am வரை
விச்வேதேவா முகூர்த்தம்
10.51 am - 11.10 am வரை
பிற்பகல் :
விதி முகூர்த்தம்
12.10 pm - 12.26 pm வரை
சுதாமுகீ முகூர்த்தம்
12.27 pm - 01.10 pm வரை
மாலை :
அர்யமன் முகூர்த்தம்
04.40 pm - 05.14 pm வரை
பக முகூர்த்தம்
05.15 pm - 06.02 pm வரை
இரவு :
அஜபாத முகூர்த்தம்
07.10 pm - 07.38 pm வரை
அஹிர்புத்ன்ய முகூர்த்தம்
07.39 pm - 08.11 pm வரை
English Summary
saraswathi poojai and ayudha poojai time to pray