தேய்பிறை அஷ்டமி ஏன் சிறப்பு வாய்ந்தது..? இன்று கால பைரவரை எவ்வாறு வழிப்பட்டால் நன்மை கிடைக்கும்..? - Seithipunal
Seithipunal


பைரவரை வழிபடுவதற்கு மிகவும் சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த நாளில் பைரவரை மனதார வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் பைரவாஷ்டகம் சொல்லி வழிபாடு எப்படிப்பட்ட துன்பங்களும் நீங்கும் என்றும், பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானது என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட காலபைரவரை வழிபட்டால் விலகி விடும் என்று சொல்லுவார்கள். இவரை வழிபட நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் வேண்டும் கூறப்படுகிறது. இந்த பதிவில் காலபைரவரை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி தெரிந்த கொள்ளலாம்.

தேய்பிறை அஷ்டமி சிறப்புகள் :

காலாஷ்டமி என பக்தர்களால் போற்றப்படும் நாள் தெய்வீக ஆற்றல் நிறைந்த ஒரு நாள். இது காலத்தின் கடவுளாக போற்றப்படும் கால பைரவருக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமிகள் இரண்டுமே பைரவருக்கு உரிய வழிபாட்டு நாள் என்றாலும், தேய்பிறை அஷ்டமி திதியில் மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. 

பொதுவாக இந்த நாளில் கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவது நம்மை பயக்கும். தங்களின் துன்பங்கள் நீங்க தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவது சிறப்பு. இப்படி தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை நீங்கும், கடன் பிரச்சனைகள், வழக்கு உள்ளிட்ட மீள முடியாத சிக்கல்கள் நீங்கும். அத்துடன், செல்வ செழிப்பு, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவையும் கிடைக்க கால பைரவர்அருள் செய்வார்.

இந்த நாளில் பைரவர் வழிப்பாடு செய்வதால், பயம், குழப்பம், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் ஆகியவை குறைவதோடு, செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வருடத்தின் 
பிப்ரவரி மாசி மாத தேய்பிறை அஷ்டமி பிப்ரவரி 20-ஆம் தேதி இன்று வந்துள்ளது.

இது மாசி மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் எப்படியான பரிகாரங்கள் செய்து, காலபைரவரை வழிபட்டால், என்ன நன்மைகளை பெறலாம் என்பதை பார்க்கலாம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடுகளும், பலன்களும் :

1. செல்வ செழிப்பு அதிகரிக்க :

இன்று மண் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி, கால பைரவர் சன்னதிக்கு முன் தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றும் போது, 

"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" 

என்ற மந்திரத்தை இரண்டு முறை ஜெபிக்க வேண்டும். பிறகு உங்களின் வேண்டுதலை மனதார காலபைரவரிடம் சொல்லி மனதார வேண்ட வேண்டும்.

2. வாழ்க்கையின் சிக்கல்கள் தீர :

இன்று ஒரு கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவிய ரொட்டியை சாப்பிட கொடுக்கலாம். 

இதன் போது , "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" 

என்ற மந்திரத்தை ஐந்து முறை சொல்ல வேண்டும்.

3. பயம் நீங்க :

இன்று அடிக்கடி பயம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் கால பைரவரின் திருவடியில் ஒரு கருப்பு நூலை ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். 

இந்த நேரத்தில், "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" 

என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அந்த நூலை உங்கள் வலது கணுக்காலில் கட்டிக் கொண்டால், கால பைரவரின் தெய்வீக சக்தி உங்களை பாதுகாப்பு அளிக்கும்.

4. தீய சக்திகளின் தாக்கம் நீங்க :

இன்றைய நாளில்  கருப்பு எள் கொண்டு குழந்தையின் தலையை ஏழு முறை சுற்றி ஆறு அல்லது ஓடும் தண்ணீரில் வீசவும். 

அப்போது, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள். 

இந்த பரிகாரம், குழந்தைகள் மற்றும் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும்.

5. குழப்பங்கள் நீங்க :

உங்கள் வீட்டில் குழப்பம், எதிர்மறை ஆற்றல் உள்ளது என்றால்,அது நீங்க,  வன்னி மரம் அருகே சென்று நீர் ஊற்றி, ஒரு நூலும் செலுத்தி, 

"ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரம் ஜெபிக்கவும். 

இது முடியாதவர்கள், வீட்டின் வாசலில் ஏழு முடிச்சுகளுடன் இருக்கும் ஒரு நூலை கட்டி, ஒவ்வொரு முடிச்சுக்கும் மந்திரம் சொல்லுங்கள். இதனால் வீட்டில் அமைதியும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

6. செல்வ வளம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதற்கு : 

பொருளாதார நிலை உயர்ந்திட, . காலபைரவருக்கு பூஜைகள் செய்து, மிளகு வடை காணிக்கையாக படைத்து வழிபடலாம். 

இதோடு, "ஓம் ஹ்ரீம் பதுகாய அபதுத்தாரணாய குரு குரு பதுகாய ஹ்ரீம் ஓம்" என்ற மந்திரத்தை சொல்லுங்கள். 

இதனால் வாழ்க்கையில் பணநிலை உயரும் மற்றும் பணவரவு அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Specialities of Theipirai Ashtami


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->