சார்வரி வருடம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?!
tamil astrology rasipalan
நாம் செய்யும் செயல்களின் மூலமே, நம் வாழ்க்கையில் நிகழும் செயல்கள் யாவும் நிர்ணயிக்கப்படுகிறது. நவகிரக சுபர்களின் பார்வைகள் இருக்கும்பட்சத்தில் சுப பலன்களை அனுபவிக்க இயலும். அதேபோல் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் அசுப பலன்களையும் அனுபவிக்க வேண்டிய சூழலும் உண்டாகின்றது.
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் மட்டுமே நடக்கும் என்று கூற இயலாது. பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டு சார்வரி வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷ ராசி :
வாகன பயணங்கள் மற்றும் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும்.
ரிஷப ராசி :
தனம் தொடர்பான செயல்பாடுகளிலும், விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மிதுன ராசி :
வாகனம் மற்றும் இயந்திரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கடக ராசி :
குடும்ப உறவு மற்றும் பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
சிம்ம ராசி :
பயணம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கன்னி ராசி :
தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொள்ளும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படுத்தவும்.
துலாம் ராசி :
ஆரோக்கியம் மற்றும் மனை, சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி :
செயல்பாடுகளில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் வெற்றியை அடைய இயலும்.
தனுசு ராசி :
மற்றவர்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் பொறுமையை கடைபிடிப்பது நன்மையளிக்கும்.
மகர ராசி :
பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்திலும், மற்றவர்களின் செயல்பாடுகளிலும் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
கும்ப ராசி :
தொழில் சார்ந்த அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு அவ்வப்போது தோன்றி மறையும்.
மீன ராசி :
உடல் ஆரோக்கியம் மற்றும் புதிய நபர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.
English Summary
tamil astrology rasipalan