திருப்பதியில் மகா பாவம் செய்து விட்டார்கள் - முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.

அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும்,  நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில், மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளும் திருப்பதி லட்டில் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணத்தீட்சதலு செய்தியாளர்களிடம் பேசிய போது, திருப்பதியில் கடந்த 5 ஆண்டுகளாக லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள் என்றும், ஆகம சாஸ்திரத்தில் இருப்பதுபோல திருப்பதியில் வழிபாடு நடத்தப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

They committed a great sin in Tirupati the former chief priest is obsessed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->