கந்த சஷ்டி விழா : சூரபத்மனை வதம் செய்யும் முருகப்பெருமான்.! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்று கருதப்படும் திருச்செந்தூரில்  எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று மாலை நடைபெறுகிறது. 

இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை நான்கு மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். 

இதையடுத்து, கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை முகமாகவும், சிங்க முகமாகவும் மாறி மாறி போரிடும் சூரபத்மனை முருகபெருமான் வேல் கொண்டும் வதம் செய்கிறார். அதன் பின்னர் சேவலாகவும், மயிலாகவும் உருவத்தை மாற்றி தனது கொடியாகவும், வாகனமாகவும் ஆட்கொள்கிறார். 

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரம் செய்து தீபாராதனையும் நடைபெறும். இதைத் தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி,பிரகாரத்தில் உலா வந்து கோவிலை அடைந்த பின்னர் சாயாபிஷேகம் நடைபெறும். 

இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில், பல்வேறு இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை- திருச்செந்தூர் இடையே இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruchenthoor murugan temple soorasamhaaram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->