ஆளுநர் மளிகை முன்பு முறிந்து விழுந்த மரம் - பெண்காவலர் படுகாயம்.!
woman police injured for tree fall in front of governor house
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக உருமாறி வருகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால், பல இடங்களில் காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுகின்றன. இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மெயின் கேட்டுக்கு எதிரில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.
இதனால், அந்த பகுதியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் நந்தினி என்பவர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவலர் நந்தினியை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மரம் முறிந்து சாலையில் விழுந்துள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
English Summary
woman police injured for tree fall in front of governor house