துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையும் சூரியன்.! இந்த 5 ராசிகளும் உஷார்.!  - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 17ஆம் தேதி துலா ராசிக்குள் சூரிய பகவான் செல்ல இருக்கிறார். புதன் தேவனுக்கு சொந்தமாகவுள்ள கன்னி ராசியை விட்டு துலா ராசிக்குள் நுழைகிறார். இதனால் பாதிக்கப்படும் ராசிகள் எது எது என்பது குறித்து காணலாம். 

கடக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மற்றவர்களுடன் தகராறு ஏற்படக்கூடும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. அத்துடன், குடும்பத்திலும் தகராறு ஏற்படும் எந்த ஒரு பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டும் பணத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது. 

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். இதனால், பணி செய்யும் இடத்தில் சாதகமற்ற நிலை ஏற்படும். பண இழப்பு உள்ளிட்டவற்றை சந்திக்க கூடும். வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் நிதி பிரச்சனை ஏற்படும். இவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே, வாகனங்களில் பயணிக்கும் போது உஷாராக இருக்க வேண்டும் பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம். 

மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடங்கள் குறித்த பயணங்களை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பண இழப்பு ஏற்படலாம். சிலருக்கு கோபம் அதிகரித்து உங்கள் மீது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும். அத்துடன், உடல் நலப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. 

மேஷ ராசிக்காரர்கள் அனாவசியமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களினால் வீட்டில் பெரிய பூகம்பம் பிடிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, பொறுமையை கடைப்பிடிக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thula rasi suriyan diversion effect for 5 zodaic


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->