உடனிருப்பவர்களின் தன்மையை அறிந்து செயல்படக்கூடிய ராசி அன்பர்களே..தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்.!
Thulam rasi Tamil new year Rasipalankal
உடனிருப்பவர்களின் தன்மையை அறிந்து செயல்படக்கூடிய துலாம் ராசி அன்பர்களே சுபகிருது வருடம் 2022-2023 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்.
பலன்கள் :
புதிய வீடு கட்டும் பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உருவாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பதற்கான மனநிலைகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சோர்வு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொண்டு வெற்றி கொள்வீர்கள்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்களுக்கு :
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் திறமையும், அனுபவமும் உண்டாகும். மென்பொருள் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளில் முன்னேற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
புதிய வேலை தொடர்பான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், பதவி உயர்வும், தடைபட்ட சம்பள பாக்கியும் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து செல்வது நல்லது. அறிமுகமில்லாத புதிய நிறுவனங்களின் தன்மையறிந்து ஒப்பந்தங்களை மேற்கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
விவசாயிகளுக்கு :
உழைப்புக்கு உண்டான லாபமும், அங்கீகாரமும் கிடைக்கும். மூலிகை தொடர்பான பயிர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் வேர்க்கடலை, சூரியகாந்தி முதலியவற்றின் மூலம் லாபங்கள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சிந்தனைகளின் போக்கில் கவனம் வேண்டும். கட்சி நிமிர்த்தமாக வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்களும், அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.
ஆலோசனை :
உடல் ஆரோக்கியம் மற்றும் புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனை பெற்று செயல்படவும்.
வழிபாடு :
கன்னிமார்களை வழிபாடு செய்து வர மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும்
English Summary
Thulam rasi Tamil new year Rasipalankal