தினம் ஒரு திருத்தலம்.. தோகை விரித்த மயிலின் முன் மயூரப்பிரியன்.. குழந்தை வேலப்பர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐவர் மலை என்னும் ஊரில் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 77 கி.மீ தொலைவில் ஐவர் மலை என்னும் ஊர் உள்ளது. ஐவர் மலையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

குழந்தை வேலப்பர் தோகை விரித்த மயிலின் கழுத்தை இடக்கையில் அணைத்தவாறும், வலக்கையை இடுப்பில் ஊன்றிய படியும், பாதத்தருகே சர்ப்பம் படம் எடுத்த நிலையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும். இந்த அமைப்புள்ள முருகனை 'மயூரப்பிரியன்" என்பர்.

இத்தோற்றத்தை அபிஷேகத்தின் போது மட்டும் தான் காண இயலும். அலங்காரத்தில் இத்தோற்றம் மறைந்து விடும்.

இக்கோயிலில் உள்ள முருகனின் திருவுருவம் வேறு எந்த கோயிலிலும் காணப்படாத திருவுருவமாகும். இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

கோயில் வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள நவகிரக மண்டபத்தில், நவகிரகங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

வேறென்ன சிறப்பு?

இக்கோயிலின் உட்பிரகாரத்தில் வடமேற்கு பகுதியில் கிழக்கு நோக்கியபடி விநாயகப்பெருமானும், தெற்கு நோக்கியபடி ஐம்பொன்னாலான நடராஜரும், சிவகாமி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

சிறிய கருவறையில் குழந்தை வேலப்பர் எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தில் மயில் வாகனம் அமைந்துள்ளது.

இம்மலையில் திரௌபதி அம்மன் சன்னதி மற்றும் இடும்பன் சன்னதியும் அமைந்துள்ளது.

முருகன் கோயிலின் எதிரே உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தை அடுத்து ஒரு சுனை உள்ளது.

அதற்கருகில் உள்ள மிகப்பெரிய பாறையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இம்மலையின் மிக உயரமான பகுதி இதுவேயாகும்.

இக்கோயிலுக்கு செல்ல பாறை மீது படிகளை செதுக்கி உருவாக்கியுள்ளனர்.

இம்மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய ஏரி உள்ளது. அதன் அருகே பெரிய ஆலமரத்தடியில் பாதவிநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

தைப்பூசம், கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி இக்கோயிலில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இத்தல மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special Dindugal kuzhanthai velappar temple


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->