இந்த பரிகாரம் செய்தால் அடகில் இருக்கும் நகைகளை மீட்கலாம்..!
Uppu Parikaram
நகைகளை அடகு வைக்கும் போது அதனை விரைவாக மீட்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்கு உங்கள் பூஜை அறையில் இந்த வழிப்பாட்டை செய்து வர உங்கள் எண்ணம் ஈடேறும்.
பொதுவாக நகைகளை வைத்து பணம் பெற்று நம்முடைய பொருளாதார தேவையை சமாளிப்போம். ஆனால், சில வேளைகளில் திரும்ப முடியாத நிலை ஏற்படும். அதற்கு இந்த் பரிகாரத்தை செய்து வர வேண்டும்.
முதலில் குளித்து முடித்து விட்டு பூஜை அறையின் முன் அமர்ந்து ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் புதியதாக வாங்கிய கல்லுப்பை முழுவதுமாக நிறைத்துக் கொள்ளுங்கள்.
அதன் மீது மஞ்சள் தூளைத் தூவி விட வேண்டும். பின்னர் அதற்கு மேல் சிறிதளவு குங்குமத்தை தூவி விட வேண்டும். இவற்றாய் செய்யும் போது மகாலெட்சுமி தேவியை மனதார வழிப்பட வேண்டும்.
பூஜைக்கான நேரம்:
காலை 10 மணிக்கு முன்னதாகவோ அல்லது மாலை 6 மணிக்கு மேற்பட்டோ தான் செய்ய வேண்டும். பின்னர் அந்த கல்லுப்பை தங்கம் வைக்கும் இடத்தில் வைக்கவும்.