எதிர்மறை ஆற்றலையும், தீய சக்திகளையும் விரட்ட..எளிய பரிகாரம்.!
Use salt water and benefits
ஒரு கிண்ணம் நீரில் கல் உப்பினை கலந்து வீட்டு வாயிலில் வைத்து விட வேண்டும். அந்த நீரினுடைய நிறம் மாறும் போது அதனை அகற்றி விட்டு வேறு நீரை மாற்ற வேண்டும். காரணம் அந்த நிற மாற்றம் என்பது வீட்டிலிருக்கும் தீய சக்திகளை அந்த உப்பு நீர் உறிஞ்சும்.
வீடுகளில் விஷ்ணுவின் அம்சமான சங்கில் நீரினை ஊற்றி வீடெங்கும் தெளித்து பின் தினசரி மாலை வேளையில் சங்கினை ஒலிக்க செய்து அதனை தினமும் பராமரித்து வர வீட்டிலிருக்கும் தீமை நீங்கும்.
நீங்கள் தொடர் நஷ்டத்தை அல்லது தோல்விகளை சந்தித்து வந்தால், உங்கள் வீடுகளில் எத்தனை மூலையிருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு காகிதத்தில் சிறிது உப்பினை கட்டி வைத்து விடுங்கள். அதிகாலையில் எழுந்து யாரிடமும் பேசாமல், அந்த காகித உப்பினை எடுத்து ஓடும் தண்ணீரில் விட்டுவிட்டால் அனைத்து தீமைகளும் தண்ணீரோடு சென்று விடும்.
English Summary
Use salt water and benefits