உ.பி., கோயில் கிணற்றுக்கு மிக பிரமாண்டமான அழகிய சுரங்கம் கண்டுபிடிப்பு! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலின் படிக்கிணற்றை ஆய்வு செய்தபோது, அதற்குள் மிகப்பெரிய மற்றும் பிரமாண்டமான சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

ஆக்ரமிப்புகளை அகற்றும் பணிகளின் போது, 1957 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதப்படும் இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

இந்த சுரங்கம் மூன்று நிலைகளைக் கொண்டு, 400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சில தளங்கள் மார்பள் கற்களால் கட்டப்பட்டுள்ளன என்று சம்பல் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.  

தற்போது 210 சதுர மீட்டர் மட்டும் வெளிப்படையாக இருக்க, மற்ற பகுதிகள் மண்ணுக்கடியில் மூடியுள்ளது. சுரங்கத்தின் முழுமையான பரப்பளவை காண, அகழாய்வுப் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கோவிலின் அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர்மா, “ஸ்கந்த புராணத்தில் இந்த கிணறும், சம்பலின் புனிதத் தலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார். இந்த கிணறு தண்ணீரில்லாதவகையில் இருந்தபோதிலும், மூடப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

அதேபோல், 46 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டிருந்த ’பஸ்ம சங்கர்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோவில் சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது. இதன் ஆய்வில் ஐந்து தீர்த்தங்கள், 19 தீர்த்தக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttarpradesh Hindu Temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->