தினம் ஒரு திருத்தலம்... தங்கம், வெள்ளி கொடிமரங்கள்.. ஒரே நேர்கோட்டில் 5 கோபுரங்கள்.. மரகதலிங்கம்..!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயில் எங்கு உள்ளது :

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்னும் ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. 5 பிரகாரங்களைக் கொண்ட இந்தக் கோயில் மேற்கு திசை நோக்கியது.

இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் புகழ்பெற்றது.

மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

பொதுவாக நவகிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16வது தேவாரத்தலம் ஆகும்.

வேறென்ன சிறப்பு :

மற்ற கோயில்களில் நவகிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன் (செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.

திருவிழாக்கள் :

தைமாதம் - தை செவ்வாய் தினத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். வைகாசி 6 நாள் திருவிழா, மாதந்தோறும் பிரதோஷம், கிருத்திகை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனைகள் :

உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய்யை வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண வரம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்கள் :

தையல் நாயகிக்கு புடவை சாற்றுதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாற்றுதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது.

மொட்டை போடுதல், காது குத்துதல், வயிற்று வலி குணமாக மாவிளக்கு போடுதல், தாலி காணிக்கை, உருவங்கள் காணிக்கை ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaitheeswaran temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->