தினம் ஒரு திருத்தலம்... பக்தி... கருணை... ஆறரை அடி உயர ஆஞ்சநேயர்...!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம்... இன்று நாம் பார்க்கவிருக்கும் திருத்தலம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்.

கோயில் எங்கு உள்ளது :

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி என்னுமிடத்தில் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் :

இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார்.

அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.

வேறென்ன சிறப்பு :

ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவகிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பசாமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழாக்கள் :

அனுமன் ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம் வருகின்றனர்.

பிரார்த்தனைகள் :

வீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்க பிரார்த்தனைகள் செய்கின்றனர்.

பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்கள் :

அனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம்.

ஆஞ்சநேயர் பாடல்கள் பாடியும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றியும் நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

veera anjaneyar temple in anaipatti


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->