ஜூன் மாத சுக்ர பலன் : சுக்கிரனின் ராசியில் ஏற்படும் மாற்றம் யாருக்கு அசுபமாக இருக்கும்? - Seithipunal
Seithipunal


நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் கிரகமான சுக்கிரன் இந்த ஜூன் மாதம் தனது இடத்தை விட்டு வேறு ஒரு இடம் மாறப் போகிறார். சுக்ர கிரகத்தின் ராசி மாற்றத்தால் பலருக்கு பலன் கிடைக்கும், சிலருக்கு இழப்புகள் ஏற்படும். யாருக்கு அசுபமாக இந்த மாத அமையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சுக்கிரன் தன் ராசியை மாற்றுகிறார், சுக்ர கிரகம் நம் வாழ்வில் சில சுப மற்றும் சில அசுப காரியங்களை செய்து பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது. நம் வாழ்வில் எவ்வளவு செல்வம் மற்றும் சுப மகிழ்ச்சியைப் பெறுவோம், இந்த செயல் அனைத்தும் சுக்கிரனின் நிலையைப் பொறுத்தது. தற்போது சுக்ரன் கிரகம் மாற்றத்தால் சிலருக்கு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அந்த ராசிகாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சுக்கிர பகவானின் இட மாற்றத்தால் மேஷ  ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். நீங்கள் ஏற்கனவே கொடுத்த கடன் பணம் வீணாகலாம். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தில் உயர்வு என்பது அவ்வளவு நன்றாக இருக்காது, இதனால் உங்களின் மூத்த  அதிகாரிகளுடன் தகராறு மற்றும் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம்.

கடகம் : கடக ராசிக்காரர்கள் சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது, கடக ராசிக்காரர்கள் சுக்கிரனின் இடம் மாற்றத்தால் சட்டம் மற்றும் அது தொடர்பான விஷயங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மேலும், ஒருவருடன் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் உண்டாகும், இந்த வீண் வாக்குவாதங்கள் நீதிமன்றத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்க வேண்டியது மிக முக்கியம். கடக ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையின் சூழ்நிலையும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் நலம் குறையும் வாய்ப்பு உள்ளது, சுக்கிரனின் இடம் மாற்றத்தின் தாக்கம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்படும். ஏதேனும் பழைய நோய் மீண்டும் வரக்கூடும், இதனால் கன்னி ராசிக்காரர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வரும். கன்னி ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வந்த ஒரு சில வாய்ப்பும் நழுவக்கூடும்.  நீங்கள் தேவை இல்லாத மற்றவர்களின் சர்ச்சையில் சிக்கினால் உங்கள் பெயர் அவமதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம் : கும்ப ராசிக்காரர்கள் வேலை உத்யோகத்தில் சிரமப்படும் வாய்ப்பு உள்ளது, கும்ப ராசிக்காரர்கள் வேலை உத்யோகம் சம்பந்தமாக சிரமப்படுவார்கள். கும்ப ராசி உத்தியோகஸ்தர்களுக்கு இலக்கை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமும் கும்ப ராசிக்காரர்கள் மனதில் எழலாம். ஆனால் கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது நேரம் சாதகமாக இல்லை. நீங்கள் வீண் வேலைகளில் நேரத்தை செலவிட வேண்டி வெறும், கும்ப ராசிக்கார மாணவர்களுக்கும் தாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது.

DISCLAIMER : இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் ஒரு ஊடகம் மட்டுமே. பயனர்கள் இந்த தகவலை தகவலாக மட்டுமே கருதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venus effect in june month for zodiac signs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->