அதிர்ஷ்டத்தை வாரி வழங்கி..ஜென்ம பாவங்களை போக்க.. வில்வ மாலை.!
Vilvamalai For luck
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தரும் வில்வ மாலை:
பூலோகத்தில் இருப்பவர்களின் பாவங்களை போக்க இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியின் வடிவமாக ஈசனால் அருளப்பட்டதே வில்வ இலையாகும்.
பிரளய காலத்தில் அனைத்தும் அழிவிற்கு உள்ளான பொழுது வேதங்கள் நான்கும் ஈசனிடம் சென்று தங்களை காக்கும்படி முறையிட்டன. அப்பொழுது எம்பெருமான் நீங்கள் அனைவரும் வில்வமரத்தின் அடியில் தவமிருங்கள் என்று ஆணையிட்டாராம். தமிழகத்தில் உள்ள திருக்கடையூரில் வில்வ மரங்களாகவே நின்று நான்கு வேதங்களும் தவமிருந்ததாக சொல்லப்படுவதுண்டு. எனவேதான் திருக்கடையூருக்கு வில்வாரண்யம் என்ற பெயரும் கொண்டு அழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த, குளிர்ச்சி மிகுந்த வில்வத்தால் செய்யப்படும் அர்ச்சனையை தான் சிவபெருமான் மிகவும் விரும்பி ஏற்கிறார்.
சிறப்புகள் வாய்ந்த வில்வ இலை :
வீட்டில் வில்வமரம் வளர்ப்பதினால் அஸ்வமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலனும் கிடைக்கிறது. இந்த மரத்தின் காற்றை சுவாசித்தாலும் அதன் நிழல் நம்மீது பட்டாலும் அதீத சக்தி கிடைக்கப் பெறுகிறது.
சிறப்பு மிகுந்த இந்த வில்வ இலையை கொண்டு சிவராத்திரியன்று சிவபெருமானை அர்ச்சிப்பதோடு வில்வாஷ்டகம் பாராயணம் செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது சித்தர்கள் சொன்ன வாக்கு.
தினந்தோறும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபடுவது என்பது இயலாத காரியமே. வில்வ மரக்கட்டை கொண்ட ருத்ராட்ச மாலையை அணிவதால் சிவபெருமானின் அருள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலியுடன் சேர்த்து அணிவதால் வாழ்விலுள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நம்பிக்கை.