விருட்ச சாஸ்திரம் என்றால் என்ன? இதென்ன புதுசா இருக்கு... வாங்க பார்க்கலாம்.!
Virutcha sasthiram special
விருட்ச சாஸ்திரம்:
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் விருட்ச சாஸ்திரம் என்றால் என்ன? விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் எந்த மரங்களை நட்டு வழிபட வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்...
விருட்ச சாஸ்திரம் என்றால் என்ன?
விருட்சம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மரம் எனப் பொருள்படும். இந்த சாஸ்திரம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களால் இயற்றப்பட்டது.
சாதாரணமாக நாம் பரிகார நிவர்த்திக்கு புரோகிதர்களை கொண்டு ஹோமம் செய்கின்றோம். இவ்வாறு ஹோமம் செய்வதன் மூலம் நமக்கு பலன்கள் கிடைத்தாலும் அது நிரந்தரமாக தங்காது.
அதற்கு மாறாக விருட்ச சாஸ்திரப்படி ஒரு மரத்தை நமக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்திற்காக நட்டு, அதனை பராமரித்து வளர்த்து வந்தால் அம்மரம் உயிருடன் இருக்கும் ஆண்டுகள் வரை நமக்கு தொடர்ந்து பலன்கள் கிடைக்கும்.
நாம் நட்டு வைக்கும் மரம் வளர்ந்து பெரியதாகி நிறைய பேருக்கு பலன்தரும் வகையில் இருக்க வேண்டும்.
நாம் எதிர்பார்த்த பலன் தான் கிடைத்து விட்டதே என நட்டு வைத்த மரத்தை வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால் அம்மரத்தை வெட்டிய தோஷத்தினால் ஏற்படும் பலனை நம் தலைமுறையினர் தான் அனுபவிக்க நேரிடும்.
ஒருவேளை நாம் நட்டு வைத்த மரம் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து விட்டலோ அல்லது பட்டுபோய் விட்டலோ அதே மரத்தின் வேறொரு கன்றை நட்டுப் பராமரித்து வரலாம். இவ்வாறு இக்கன்று வளர்வதன் மூலமும் நமக்கு பலன்கள் கிடைக்கும்.
நட்சத்திரம் - விருட்சம் :
அஸ்வினி - ஈட்டி மரம்.
பரணி - நெல்லி மரம்.
கார்த்திகை - அத்திமரம்.
ரோகிணி - நாவல்மரம்.
மிருகசீரிஷம் - கருங்காலி மரம்.
திருவாதிரை - செங்கருங்காலி மரம்.
புனர்பூசம் - மூங்கில் மரம்.
பூசம் - அரசமரம்.
ஆயில்யம் - புன்னை மரம்.
மகம் - ஆலமரம்.
பூரம் - பலா மரம்.
உத்திரம் - அலரி மரம்.
அஸ்தம் - அத்தி மரம்.
சித்திரை - வில்வ மரம்.
சுவாதி - மருத மரம்.
விசாகம் - விலா மரம்.
அனுஷம் - மகிழ மரம்.
கேட்டை - பராய் மரம்.
மூலம் - மராமரம்.
பூராடம் - வஞ்சி மரம்.
உத்திராடம் - பலா மரம்.
திருவோணம் - எருக்க மரம்.
அவிட்டம் - வன்னி மரம்.
சதயம் - கடம்பு மரம்.
பூரட்டாதி - தேமா மரம்.
உத்திரட்டாதி - வேம்பு மரம்.
ரேவதி - இலுப்பை மரம்.
ராசிகள் - விருட்சம் :
மேஷம் - செஞ்சந்தன மரம்.
ரிஷபம் - அத்தி மரம்.
மிதுனம் - பலா மரம்.
கடகம் - புரசு மரம்.
சிம்மம் - குங்குமப்பூ மரம்.
கன்னி - மா மரம்.
துலாம் - மகிழ மரம்.
விருச்சிகம் - கருங்காலி மரம்.
தனுசு - அரச மரம்.
மகரம் - ஈட்டி மரம்.
கும்பம் - வன்னி மரம்.
மீனம் - புன்னை மரம்.
இம்முறையில் நமக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கி, வாழ்வில் உயர்வு பெற ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், ஒவ்வொரு ராசிக்கும் முறையே குறிப்பிட்டுள்ள விருட்சங்களை கோயில்களிலோ, வீட்டிலோ, வேறு ஏதேனும் ஒரு இடத்திலோ நட்டு வைத்தால் துயர் நீங்கி இன்பமுடன் வாழலாம்.
English Summary
Virutcha sasthiram special