விருட்ச சாஸ்திரம் : வீட்டில் நாவல் மரத்தை வளர்க்கலாமா?
Vrutshashastram Can we grow novel tree at home
வீட்டில் நாவல் மரத்தை வளர்க்கலாமா?
நாவல் மரம் எல்லா வகையிலும் ஒரு சிறப்பான மரம். இதனை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் நாக்கின் நிறம் கருமையாக மாறும். மேலும் நாக்கு வறண்டு, தண்ணீர் குடிப்பீர்கள். இப்படி நாக்கின் நிறத்தை மாற்றுவதால் தான் நா+அல் - நாவல் என்று வந்தது. இதனுடைய சுவை துவர்ப்பு ஆகும்.
மேலும், நாவல் மரத்தை அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் என்றும் அழைப்பார்கள். இதில் கரு நாவல், கொடி நாவல், சம்பு நாவல் என வகைகளும் உள்ளன.
நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் உண்டு.
நாவல் பட்டை சாறு எல்லா வகையிலும் நல்லதை கொடுக்கும்.
நாவல் இலையை பொடி செய்து சாப்பிட்டால் பேதி நிற்கும். இந்தப் பொடியால் பல் தேய்த்தால் பல் ஈறுகள் வலுவடையும்.
நாவல் இலையின் சாம்பல் நாள்பட்ட தீக்காயங்கள் மற்றும் வெட்டுக் காயங்களை குணப்படுத்தும்.
நாவல் பழம் நீரிழவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியை தீர்க்கக்கூடியது. நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் உடம்பிற்கு குளிர்ச்சி தரும்.
மேலும் சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றுகளை விரட்டும். நீர்க்கடுப்பு பிரச்சனையையும் தீர்க்கும். இதுதவிர நாவல் பழத்தில் புரோட்டின், நார்சத்து, வைட்டமின் சி மற்றும் டி போன்றவையும் உள்ளது.
எங்கு வளர்க்கலாம்?
பொதுவான இடங்களில் நாவல் மரங்களை வளர்த்தால் நல்லது. ஆனால் வீட்டில் வளர்ப்பது அவ்வளவு விசேஷம் கிடையாது. இருந்தாலும் நீங்கள் வீட்டில் நாவல் மரங்களை வளர்த்தால் அந்த இடத்தை தூய்மையாகவும், வீட்டை பாதிக்காத வண்ணம் இடைவெளி விட்டு வளர்க்கலாம்.
வீட்டில் நாவல் மரங்களை வளர்க்கக்கூடாது என்று சொல்ல காரணம் நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். கரு நாகங்களும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். அந்த மரத்திலிருந்து வெளிப்படக்கூடிய வைப்ரேஷன், அதனுடைய காற்றின் குளிர்ச்சி போன்றவை இவைகளை ஈர்க்கும்.
அதனால் இதனை வீடுகளில் வளர்க்காமல், விளை நிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் வளர்த்தால் நல்லது. அந்தக் காற்று உடலிற்கும் நல்லது, மகிழ்ச்சியும் தரக்கூடியது.
மேலும் வீட்டில் நாவல் மரம் வளர்க்கும் பட்சத்தில் பாதுகாப்போடும், வீட்டை பாதிக்காத வண்ணமும் வளருங்கள்.
எந்த திசையில் வளர்க்கலாம்?
வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் நாவல் மரங்களை வளர்க்கலாம். ஆனால் வீட்டுச் சுவரிலிருந்து பத்து அடி தூரம் தள்ளி வளர்க்க வேண்டும்
English Summary
Vrutshashastram Can we grow novel tree at home