எந்தெந்த எண்ணெயில் எப்படி விளக்கேற்றினால் என்ன பலன்.! விளக்கேற்றுவது குறித்து விவரங்கள்.! - Seithipunal
Seithipunal


வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாமல் வீட்டின் முற்றம், சமையலறை, துளசி மாடம் போன்ற அனைத்து இடங்களிலும் தீபங்களை ஏற்ற வேண்டும்.

விளக்கேற்றும் திசை :

கிழக்கு - துன்பங்கள் நீங்கும். குடும்ப அபிவிருத்தி உண்டாகும்.

மேற்கு - கடன் தொல்லை அகலும். தோஷங்கள் நீங்கும்.

வடக்கு - திருமணத்தடை அகலும்.

தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது. (மரணபயம் உண்டாகும்)

விளக்கில் எத்தனை திரி போட வேண்டும்?


திரியானது ஒன்று, இரண்டு, மூன்று என்ற எந்த கணக்கில் வேண்டுமானாலும் இருக்கலாம். இரண்டு திரிகளை சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். இவ்வாறு செய்வது வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமையை குறிக்கும்.

விளக்கேற்ற சிறந்த எண்ணெய் எது?

பசுநெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.

நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் - விநாயகரின் அருளை பெறலாம்.

இலுப்பை எண்ணெய் - கடன் தொல்லை நீங்கும். சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

விளக்கெண்ணெய் - புகழ் மற்றும் செல்வ வளம் உண்டாகும்.

விளக்கேற்றக்கூடாத எண்ணெய் :

கடலை எண்ணெய்

கடுகு எண்ணெய்

பாமாயில் போன்றவைகளை கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவேக்கூடாது. இவை மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்கவல்லவை.

வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றலாமா?

வேப்ப எண்ணெயை கொண்டு விளக்கு ஏற்றும்போது அதை வீட்டின் நுழைவாயில் மாடத்தில் வைக்க வேண்டுமே தவிர வீட்டிற்குள் வைக்கக்கூடாது.

பஞ்சதீப எண்ணெயில் விளக்கு ஏற்றுவது சரியா?

வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய்.

இந்த எண்ணெய்களை தனித்தனியாக கொண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். மாறாக ஐந்து எண்ணெயையும் ஒன்றாக கலந்து விளக்கு ஏற்றுதல் தவறு.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவது சாஸ்திரப்படி சரியானது அல்ல.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள் :

தேங்காய் எண்ணெய் - விநாயகர்

பசுநெய் - மகாலட்சுமி

இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் - குலதெய்வம்

நல்லெண்ணெய் - பைரவர்

விளக்கெண்ணெய், வேம்பு - அம்மன்

தீபம் தானாக அணையலாமா?

தீபம் ஏற்றிய பின் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக்கூடாது. இது கெடுதலை கொடுக்கும்.

தீபத்தை எப்படி குளிர்விப்பது?

தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை குளிர்விக்கும்போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.

மேலும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது.

தீபத்தை பூவால் குளிர்விக்கலாம்.

தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.

தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை 'ஓம் சாந்த ஸ்ரூபிணே நம" என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which oil lamp use and benefits


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->