ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள்? ஏன் 32 நாட்கள் வருகிறது உங்களுக்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் மாதங்களின் கால அளவு சமமாக இருப்பதில்லை. பங்குனி மாதம் 30 நாட்கள் என்றால், சித்திரை மாதம் 31 நாட்கள் என ஒவ்வொரு மாதமும் 30, 31 நாட்கள் கொண்டு முடியும். ஆனி மாதம் 32 நாட்களை கொண்டுள்ளது. அது ஏன்? என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

ஆனி மாதம் :

சூரியனின் வடதிசை பயண காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினை கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும்.

ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்டா மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.

ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதி பகுதி. தேவர்களின் மாலை நேர பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாத காலமாகும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன.

ஆனியில் 32 நாட்கள் :

தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. இந்த மாதத்தில் மட்டுமே பிற மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்கு காரணம். இதன் காரணமாகவே இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரித்திருக்கிறது.

ஜேஷ்டாபிஷேகம் விழா?

ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தலைமை பொறுப்பினை தக்க வைத்து கொள்ளவும், தலைமை பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்து கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி மூலம் நட்சத்திரம் :

ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் யோகத்தினை பெற்றிருப்பர். அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why 32 days in Tamil Ani Month


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->