வருகிறது.. பங்குனி உத்திர திருநாள் : ஏன் ஐயப்பனுக்கு ஸ்பெஷல்? பங்குனி உத்திரமும்.... ஐயப்பன் தரிசனமும்.! - Seithipunal
Seithipunal


 

பங்குனி உத்திரம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி பௌர்ணமி உத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

தங்கள் குழந்தை, படிப்பில் முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே கிடையாது. அவர்கள், குழந்தைகளின் தெய்வமான சாஸ்தாவை வணங்க வேண்டும். அதற்கு ஏற்ற நாள் பங்குனி உத்திரம்.

ஐயன் ஐயப்பனுக்கு ஸ்பெஷல் ஏன்?

மாதந்தோறும் வருகிற உத்திரம் விசேஷம் என்றாலும் பங்குனி மாதத்தில் வருகிற உத்திரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திர நாளில்தான், ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக அவதரித்தார் என்கிறது ஐயப்ப சுவாமி புராணம்.

ஸ்ரீஐயப்ப சுவாமி, மணிகண்ட சுவாமியாக மண்ணில் அவதரித்த நன்னாளான பங்குனி உத்திர திருநாளன்று அருகில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலுக்கு சென்று ஐயன் ஐயப்பனை கண்ணாரத் தரிசிப்போம்.

சாஸ்தா என்றும், ஸ்ரீஐயப்ப சுவாமி என்றும் போற்றப்படும் ஸ்ரீமணிகண்டனுக்கு பங்குனி உத்திர நாளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொள்வோம். 

பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீஐயப்ப சுவாமி அவதரித்த தினம் என்பதால், இந்த நாளில் காலை முதல் இரவு வரை ஸ்ரீஐயப்ப சுவாமி குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும், சந்தனம் முதலான திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்களும் மற்றும் ஆராதனைகளும் நடைபெறும்.

மேலும் ஐயப்பனின் திருநட்சத்திரம் மற்றும் திரு அவதார நன்னாளான பங்குனி உத்திரத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோவில்களில் கூடி, ஐயப்பனை தரிசிப்பார்கள்.

சபரிமலை நாதன், சபரிகிரிவாசன், ஐயப்ப சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படும் ஐயப்ப சுவாமிக்கு சாஸ்தா என்றும் பெயர் உண்டு.

இவரை ஒவ்வொரு புதன்கிழமையிலும் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும். 

அதேபோல, ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம் உத்திரம். எனவே, மாதந்தோறும் உத்திர நட்சத்திர நன்னாளில், ஐயப்ப சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசித்து வேண்டிக்கொண்டால், நம்முடைய தோல்விகளையெல்லாம் வெற்றிகளாக மாற்றித் தந்தருளுவார் ஐயப்ப சுவாமி. மேலும் இதுவரை இருந்த காரியத்தடைகளை எல்லாம் நீக்கி அருளுவார் ஐயப்ப சுவாமி...

சுவாமியே சரணம் ஐயப்பா...!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why panguni Uthiram special For iyapoaan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->