2021ஆம் ஆண்டு... திருமண பந்தத்தில் இணைந்த விளையாட்டு வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


திருமணத்தில் இணைந்த விளையாட்டு வீரர்கள் :

 

விஜய் சங்கர் - வைஷாலி :

 

இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் வைஷாலி விஸ்வேஸ்வரன் ஜனவரி மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

 

ஜெய்தேவ் உனத்கட் - ரின்னி :

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட், ரின்னி என்பவரை பிப்ரவரி 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

 

ஜஸ்பிரித் பும்ரா - சஞ்சனா கணேசன் :

 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும், விளையாட்டு தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் மார்ச் 15ஆம் தேதி திருமணம் நடந்தது.

 

ஜெயந்த் யாதவ் - திஷா சாவ்லா :

 

இந்திய ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் அவரது காதலி திஷா சாவ்லா என்பவரை பிப்ரவரி 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

 

ஆடம் ஜாம்பா - ஹாட்டி :

 

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஆடம் ஜாம்பா, தனது நீண்ட கால காதலியான ஹாட்டியை ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

 

ரோகித் தாமோதரன் - ஐஸ்வர்யா :

 

புதுச்சேரி உள்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் தாமோதரனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கடந்த ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடந்தது.

 

சிவம் துபே - அஞ்சு கான் :

 

இந்தியாவின் ஆல்ரவுண்டரான சிவம் துபேக்கும், அவரது காதலி அஞ்சு கானுக்கும் ஜூலை 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

 

ராகுல் திவாட்டியா - ரிதி பன்னு :

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு சூப்பர் ஸ்டார் ராகுல் திவாட்டியாவுக்கும், ரிதி பன்னுவுக்கும் நவம்பர் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 cricketers marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->