2022ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ஆர்.சி.பி ரசிகர்கள்தான் காரணம் - தினேஷ் கார்த்திக்!!
2022 T20 World paly reason rcb fans
இந்திய அணிக்காக 37 வயதில் நான் கம்பேக் கொடுத்ததில் ஆர்சிபி மற்றும் அதன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறிவுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த பெங்களூர் அணி லீக் போட்டிகளின் இரண்டாம் பாதியில் தொடர் 6 போட்டிகளில் வெற்றியைப் பெற்று ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று பிளே ஆப்க்கு முன்னேறியது.
எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூர் அணி மோதியது. அது பெங்களூர் அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த முறையாவது ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வென்று விடும் என்று நம்பிக்கையில் காத்திருந்து பெங்களூர் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐபிஎல் தொடர் தொடங்கி 17ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்த அடுத்த நொடியே தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வீரரும் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் பேசுகையில், 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடுதி விளையாட வாய்ப்பு கிடைத்தது பெங்களூர் அணி ரசிகர்களால் தான் என்று சில நேரங்களில் எனக்கு தோன்றும். அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இருக்க வேண்டும் என ரசிகர்கள் அப்போது பெரிய அளவில் வலியுறுத்தினர். அதனால்தான் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்தது. 37 வயதில் நான் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்ததில் பெங்களூர் அணி மற்றும் அதன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதுஎன்று கூறினார்.
English Summary
2022 T20 World paly reason rcb fans